^மேலே செல்ல

 • 1
  சுன்னாகம் நூலகத்தில் இடம்பெற்ற புத்தககண்காட்சியில் பாடசாலை சிறுவர்கள்...
 • 2
  நூலகவாரத்தையொட்டி ஏடுகள் நூலகத்தினுள் நூலகரால் எடுத்துவரப்படுகின்றது.
 • 3
  புத்தககண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களின் ஒரு தொகுதி
 • 4
  சுன்னாகம் நூலகத்தின் முற்புறத்தோற்றம்.
 • 5
  புத்தககண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களின் ஒரு தொகுதி

சுன்னாகம் பொதுநூலகத்தின் வரலாறு

சுன்னாகம் பொது நூலகம் சுன்னாகம் பட்டணசபையால் 01-10-1964 இல் ஆரம்பிக்கப்பட்டது. அச் சமயத்தில் பட்டணசபையின் தலைவராக செனட்டர் பொ.நாகலிங்கம் கடமையாற்றினார். யாழ் - காங்கேசன்துறை பிரதான சாலையில் ஆயுர்வேத வைத்தியர் திரு.தம்பையாவின் இல்லத்தில் சில காலமும் பின்பு பண்டிதர் சிவசம்பு அவர்களின் இல்லத்தில் சில காலமும் தற்காலிகமாக நூலகம் இயங்கி வந்தது. நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.வி.மா.குமாரசாமி அவர்களின் 3 பரப்புக்காணி கொள்வனவு செய்யப்பட்டது. பொது மக்களின் நன்கொடைகளைப் பெற்று நூலகத்துக்கான அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந் நூலகக் கட்டட வரைபடத்தை கொழும்பு கட்டடக் கலைஞர் திரு.Nளுஊ.பெரேரா வரைந்துள்ளார்.

18.01.1973 இல் யாஃஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபராக இருந்த திரு.வி.சுப்பிரமணியம் டீ.யு. அவர்களால் நூலகத்துக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடைபெற்றன. 1974 ஜூன் மாதமளவில் கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளூராட்சி ஆணையாளர் திரு.னு.அல்விஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்திலிருந்து வெளிநாட்டுத் தூதரகங்களாலும் நூலக சேவைகள் ஆவணமாக்கல் சபையாலும் வழங்கப்பட்ட பெறுமதியான நூல்கள் அன்பளிப்பாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. சபையின் நிதி மூலமும் உள்ளூராட்சி நன்கொடை மூலமும் தமிழ், ஆங்கில நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. போதிய தளபாடங்கள் செய்யப்பட்டு பாவனையிலுள்ளன. பொது மக்களிடமிருந்தும் வாசகர்களிடமிருந்தும் கட்டட அமைப்புக்கு நிதி உதவிகள் கிடைத்துள்ளன. அவ்வாறே பெறுமதியான பல நூல்கள் வாசகர்களால் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

பட்டணசபை நிருவாகிகளும் பின்பு மாவட்ட அபிவிருத்திச் சபை நிருவாகிகளும் நூலக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்கள். பின்பு வலிகாமம் தெற்கு பிரதேச சபை உருவாக்கம் பெற்ற பின்னர், பிரதேச சபைக்கு மக்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட சபையினரும் அதிகாரிகளும் காலத்துக்குக் காலம் திருத்த வேலைகள், தளபாடங்கள், மின்சார உபகரண அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார்;கள்.

நாட்டில் நிலவிய யுத்த நிலைமைகளால் நூலகத்தின் பெறுமதியான புத்தகங்களுக்கும் சொத்துக்களுக்கும் நியாயமான அளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 1995 காலப் பகுதியில் நூலகம் உடைக்கப்பட்டு நூல்கள் வெளியில் வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டன. சுமார் 1850 நூல்கள் வரையில் இழக்கப்பட்டன.

இந் நூலகத்தில் இரவல் வழங்கல் பிரிவு, உசாத்துணைப் பிரிவு, சிறுவர் நூலகப் பிரிவு, பத்திரிகை சஞ்சிகைகள் பிரிவு, கல்விப் பிரிவு, என்பன ஆரம்ப காலம் முதலே சிறப்பான நிலையில் உருவாக்கப்பட்டு வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாதாந்த கல்வி வட்டம், கருத்தரங்கம் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்களின் சொற்பொழிவுகள், கல்வி விரிவுரைகள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. கட்புல செவிப்புல சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி, என்பவற்றுக்கான பகுதியும் போட்டோ பிரதி செய்யும் இயந்திர வசதியும், இணைய வசதிகளுடன் கூடிய கணனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நூலகத்தில் தற்பொழுது யுத்தம் மற்றும் பழுதடைதல் வகையில் இழக்கப்பட்ட 3629 நூல்கள் போக 18351 நூல்கள் உள்ளன. இவற்றில் 

தமிழ் மூல நூல்கள் - 13003, 

ஆங்கில மொழி நூல்கள் - 5195, 

சிங்கள மொழி நூல்கள் - 153 ஆகும்.

சிறுவர் நூலகப் பகுதியில் 

425 அங்கத்தவர்களும் 

பொது வாசகர் பகுதியில் 

3295 அங்கத்தவர்களும் 

பதிவு செய்யப்பட்டவர்களாகவுள்ளனர். 

நாளாந்தம் இரவல் வழங்கும் பகுதியை சராசரி 135 அங்கத்தவர்களும் உசாத்துணைப் பகுதியை சராசரி 110 அங்கத்தவர்களும், பத்திரிகை சஞ்சிகைப் பகுதியை 230 பேர் வரையிலும் சிறுவர் நூலகப் பகுதியை சராசரி 40 மாணவர்களும், கல்விப் பகுதியை சராசரி 70 மாணவர்களும் இணைய வசதியை சராசரி 20 பேரும், போட்டோப் பிரதியாக்கற் சேவையை சராசரி 25 பேரும் பயன்படுத்துகின்றார்கள். 

 

மேலும் நூலகத்தில் உள்ளூராட்சி மறுசீரமைப்பு செயற்றிட்டங்களின் அடிப்படையில் பல நிகழ்வுகள் 2008 முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாசகர் வட்டம், நூலக ஆலோசனைக்குழு என்பன முலம் காத்திரமான ஆலோசனைகளும் உதவிகளும் அனுசரனைகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. பொது மக்களிடமிருந்து அன்பளிப்பாகப் புத்தகங்கள் கிடைக்க இக் குழுக்கள் உதவுகின்றன. வாசகர் வட்டத்தின் ஒத்துழைப்புடன் 'வெள்ளிமலை' என்னும் காலாண்டு சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகையில் உள்ளூராட்சி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமான ஆக்கங்களும், இப் பிரதேசம் பற்றிய கட்டுரைகளும் இப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்புக்கள் பற்றிய கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. இதன் மூலம் எழுத்தாற்றலை மாணவர் மட்டத்தில் மேம்படுத்தவும் அவர்களின் திறனை வளர்க்கவும் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந் நூலகத்தில் உள்ளூராட்சி மறுசீரமைப்புச் செயற்றிட்டத்தின் கீழ் மாதாந்தம் ஒரு புத்தகம் ஒரு சமுதாயம் கருத்தரங்கு, மாதாந்தம் கலை, கலாசார நிகழ்வு என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

உலக மகளிர் தினம், உலக நாடக தினம், உலக புத்தக தினம், தேசிய நூலக வாரம், உள்ளூராட்சி வாரம், தேசிய வாசிப்பு மாதம், உலக சிறுவர் முதியோர் தினம், முதலியவை பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடனும் பிரதேச எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் ஒத்துழைப்புடனும் நடாத்தப்படுகின்றன. போட்டிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன இச் சந்தர்ப்பங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

கவிதைகள், பேச்சுகள், நாடகங்கள், நடனங்கள், அபிநயங்கள் போன்றன காலத்துக்குக் காலம் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன, மேடையேற்றப்பட்டுள்ளன. வயலின் இசைக்கச்சேரி, வில்லிசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம், எழுத்தாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படல் என்பனவும் இந்; நிகழ்ச்சித் தொடர்களில் நடாத்தப்பட்டுள்ளன.

நூலகத்தை வாசகர் பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டு கட்டுரை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

நாடகவியல் கல்விக் கருத்தரங்கு தரம் ஐந்தாம் ஆண்டு மற்றும் யுஃடு மாணவருக்காக நடாத்தப்பட்டுள்ளதுடன், புகைப்படக் கண்காட்சி நடாத்தப்பட்டு, நல்ல நூல்கள் பற்றிய அறிமுகக் கூட்டங்களும் நடாத்தப்பட்டன.

தகவல் வளங்கள் யாவற்றையும் எடுத்துக் காட்டும் விதமான கண்காட்சி தேசிய வாசிப்பு மாதச் செயற்பாடாக ஒழுங்குபடுத்தப்பட்டது.

கிரமமான முறையில் நூலகச் செயற்பாடுகள் சம்பந்தமான அறிக்கைகளும், 2008, 2009, 2010இ2011இ2012இ2013 வருடங்களுக்கான தகவல் திரட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந் நூலகம் 2009ல் மாகாண மட்டத்தில் சிறந்த நூலகமாகத் தெரிவு செய்யப்பட்டு நூலக சேவைகள் ஆவணமாக்கல் சபையின் விருது உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ ஜானக பண்டார தென்னக்கோன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் உள்ளூராட்சி தேசிய மாநாடும் கண்காட்சியும் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுன்னாகம் நூலகத்தின் செயற்பாடுகள் அடங்கிய கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ ஜானக பண்டார தென்னக்கோன் அவர்களும் குழுவினரும் பொது மக்களும் இக் கூடத்தை பார்வையிட்டுப் பாராட்டியுள்ளார்கள். வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் பு.யு.சந்திரசிறி அவர்களும் அதிகாரிகளும் இக் கூடத்தை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.

2009 ஒக்ரோபர் மாதத்தில் யாழ். மத்திய கல்லூரியில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மாநாடும் கண்காட்சியும் நடைபெற்றது. அங்கு நூலகத்தின் செயற்பாடுகளை காண்பிக்கும் பிரிவு வலி.தெற்கு பிரதேச சபையின் காட்சிக் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.ஆ.சிவசுவாமி அவர்களும் அதிகாரிகளும் பொது மக்களும் பார்வையிட்டுள்ளார்கள். 

2011 ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண உள்ளூராட்சி மாநாட்டுக் கண்காட்சியின் போது முப்பரிமாண நூலக சேவையூடான காட்சிப்படுத்தலின்போது தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு 2012 பங்குனி மாதம் தேசத்தின் மகுடம் கண்காட்சியில் காட்சிப்படுத்தல் நிகழ்விலும் விருந்தினர்களின் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது நூலகம் 2007,2008,2009,2010இ2011இ இ2012ஆம் வருடங்களின் வாசிப்பு மாதத்திற்கான விருதுகளையும்இ 2009ல் மாகாண மட்டத்தில் சிறந்த நூலகமாகவும்இ 2013ல்;வடக்கு மாகாணத்தில் அதிசிறந்த நூலகத்திற்கான முதலாமிடத்திற்கான பரிசினை தேசிய ஆவணவாக்கல் சேவைகள் சபைஇ கல்வி அமைச்சு என்பன இணைந்து வழங்கியுள்ளமை மகிழ்வைத் தருகின்றது. 

இந் நூலகத்தின் முதலாவது நூலகராக திரு.பொ.சிவலிங்கம் கடமையாற்றியுள்ளார். அடுத்து செல்வி.வேலுப்பிள்ளை ரஞ்சிதமலர்;இ திரு.சி.குமரவேல் திருமதி. இரத்தினேஸ்வரி பாலசிங்கம்இ திருமதி சிவபாக்கியம் கோகழிநாதன் இவரைத் தொடர்ந்து திரு.க.சௌந்தரராஜன் அவர்களும்; நூலகராகக் கடமையாற்றியுள்ளனர். தற்போது  திருமதி.இரத்தினேஸ்வரி கருணாநிதி அவர்கள் நூலகராகக் கடமையாற்றி வருகின்றார்.

நூலக உதவியாளர்களாக, திரு.சி.குமரவேல், திருமதி.சந்திராதேவி கமலநாதன், திரு.சி.சிவஞானம், ஆகியோரும் நூலகத் தொழிலாளியாக, திரு.கா.தேவமனோகரன், திரு.துரைசிங்கம்இ திரு.சொ.திருஆரூரன் ஆகியோர்  கடமையாற்றியுள்ளனர். பதில் தொழிலாளியாக திரு.சி.கிரிசாந் அவர்களும்; கடமையாற்றியுள்ளார்.

 தற்பொழுது திருமதி.நளினி அம்பிகைபாலன்இ திருமதி.நந்தினி பரமநாதன். திரு.ம.ஜீன்சன் ஆகியோர் நூலக உதவியாளராகக் கடமையாற்றுகின்றனர். திரு.சு.தேவராசா, திரு.வி.சிவயோகநாதன் ஆகியோர் நூலகத்தொழிலாளியாக கடமையாற்றுகின்றனர். 

நூலகக் காவலாளியாக திரு.லோகநாதன், திரு.பாலசுப்பிரமணியம் திரு.எஸ்.அல்பிரட் ஆகியோர் கடமையாற்றிய பின்னர், திரு.இ.அமல்ராஜ் தற்பொழுது கடமையாற்றுகின்றார். பதில் காவலாளியாக திரு.க.ஜெககரன் கடமையாற்றுகிறார்.